top of page

ஒரு பொம்மை கதை

  • Writer: Sukumar Sey
    Sukumar Sey
  • Jun 8, 2021
  • 1 min read

சிரிக்கும் பொம்மை ஒன்று சாகடித்து போன கதை. இமைக்காமல் பார்த்தவள் இதயம் அறுத்து போன கதை.

கல்லின் மேல் ஈரத்தடமாய் காய்ந்து கொண்டு இருந்தேனே, சொட்டும் மழைத்துளியாய் எனை கரைத்து போனவளே,

நீ வந்த பிறகு நான் தொலைத்த கனவெல்லாம் தூரத்தில் எனை பார்த்து ஏளனமாய் சிரிக்குதடி. நீயும் தொலைந்து போவாயாக.

வெட்டியெறிந்த மரக்கிளையாய் மண்ணில் மக்கி கிடந்தேனே, அதில் முட்டி முளைத்த செடியாக எனை சுற்றி படர்ந்தவளே,

நீ போன பிறகு நான் மறந்த தூக்கம் எல்லாம் கண் கொத்தி பறவை போல் குருடனாக்கி ரசிக்குதடி. நீயும் மறந்து போவாயாக.

குயவன் கையில் சக்கரமாய் சிறையில் சிக்கி சுழன்றேனே, களிமண்ணாக என் மேல் ஏறி பானையாகி போனவளே,

நீ இல்லாமல் போன பிறகு நான் சென்ற பயணமெல்லாம் நீ இல்லாமல் போனதனால் இழப்பெதுவும் இல்லையடி. நீயும் சென்று விடுவாயாக.

சிரிக்கும் பொம்மை ஒன்று சாகடித்து போன கதை. இமைக்காமல் பார்த்தவள் இதயம் அறுத்து போன கதை.

 
 
 

Comentarios


bottom of page