அவ காதோரம் வழிஞ்சோடும் ஒரு சொட்டு அருவியில ஒரு நாளு நனைஞ்சிட தான் ஒரு ஜென்மம் காத்திருந்தேன்
கழுத்தோட அணை போட்டு வழியாம தடுத்திருந்தா ஒரு ஊர தணிச்சிருக்கும் நெலமெல்லாம் செழிச்சிருக்கும்
இப்போ நெஞ்சோட நிக்காம பள்ளம் வர பாஞ்சோட ஆறா தான் மாறிடுச்சே குளிச்சாட கூப்புடுதே
காட்டாறு கரையோரம் சலனப்பட்டு நிக்கையில நீந்த கூட கத்துக்கல மூழ்குனாலும் தப்பே இல்ல
குதிக்காத ஒரு நிமிஷம் அண்ணாந்து பாத்திருந்தேன் இன்னுமொரு சொட்டருவி வழிஞ்சோட காதோரம் காத்திருந்தேன்
காதோரமும் கழுத்தோரமும் நெஞ்சோரமும் குழியோரமும் பேய் காத்தா அலஞ்சாடுற மனசெல்லாம் பெருங்கொழப்பம்
காதோரமே விழுந்து கெடப்போமா? ஆத்தோட விழுந்து துடிப்போமா? இல்ல முடிவொன்னும் எடுக்காம அடுத்த ஜென்மம் வர தவிப்போமா?
– சுகுமார் செ
Comments