நேத்து ஆபீஸ் முடிஞ்சு ஹாஸ்டல் வந்துட்டு இருந்தேன். வழியெல்லாம் பளிச்சினு பல பெண்கள். “பௌர்ணமி நிலா!!!”, அப்டினு ஈஈஈஈஈ’னு இளிச்சிட்டே கொஞ்சம் வானத்த பாத்தேன். கொய்யால.. கொள்ள அழகு. அந்த பிறை நிலா, மராத்தி பெண்களோட மூக்குத்தி போல ஒரு வெள்ள வளையமா. அந்த போதைலயே ஹாஸ்டல் போய் சேந்தேன்.
பல பௌர்ணமியும், ஒரு பிறையும் தந்த போதைல மட்டையாகி நான் கெடக்க, பீர் குடிச்சவனுக்கு மோர் ஊத்துற கதையா எனக்கு ஒரு நாதாரி நண்பன் போன் பண்ணி தொலைக்க, ரூமுக்குள்ள சிக்னல் இல்லாம நான் மாடிக்கு போனேன். நண்பன் பேசுறான் பேசுறான் பேசிக்கிட்டே இருக்கான். அவன் குரல் போர் அடிச்சு போய் நான் மறுபடியும் வானத்த பாக்க ஆரம்பிச்சேன். நட்சத்திரமெல்லாம் ஒவ்வொன்னா என்ன பாத்து கண் அடிச்சுது. அதுவாச்சு அடிக்குதே. “மகிழ்ச்சி”-னு திரும்ப நான் கண் அடிக்க, கண் அடிச்ச நட்சத்திரம் ரெண்டு மெல்ல நகந்துது.
அங்க பக்கத்துல இருந்த ஒரு அண்ணன கூப்ட்டு, “அண்ணே அங்க பாருங்க… ரெண்டு நட்சத்திரம்… பக்கத்துக்கு பக்கத்துல..”
“ஜொய்ங்’னு பறந்துச்சா?”
“புறா இல்லண்ணே.. நட்சத்திரம். நகருது பாருங்க”
“ஏரோப்ளேன்’டா அது”
“ஏரோப்ளேன்’ல இப்டிலாம் இவ்ளோ லைட் எரியாது’ணே”
அவர் திரும்ப அத பாத்தாரு. டிஸ்கோ பாள் போல கலர் கலரா லைட் எரிஞ்சுட்டு ரொம்ப பொறுமையா நகந்துட்டு இருந்துச்சு.
“ஒரு வேல பலூனா இருக்குமோ?”-னு கேட்டார்.
“பொறுமையா நகர்ரத பாத்தா பலூன்’னு சொல்லலாம். பட் பலூன்’ல ஏன் லைட் எரியுது. அதுவும் இத்தன லைட்டு.”
“ஒரு வேல பாகிஸ்தான் வேவு பாக்ரானோ?!”
“ஒரு வேல பறக்கும் தட்டா இருக்குமோ?”
கொஞ்சம் கொடூரமா என்ன மொரச்சிட்டு, “பறக்கும் தட்டு தானே தம்பி? கீழ போய் உன் தட்ட பறக்க விட்றேன். பாத்துக்கோ.”-னு கீழ எறங்கி போய்ட்டார்.
நான் அந்த ரெண்டையே பாத்துட்டு இருந்தேன். கிட்ட நெருங்கிட்டே வந்தது மெல்ல பின்னாடி போக ஆரம்பிச்சிது. கொஞ்ச கொஞ்சமா சைஸ் கொறஞ்சி ஒரு புள்ளியா மாறி, நட்சத்திர அளவுக்கு வந்ததும் ஒரு முற கண்ணடிச்சிட்டு என் கண்ண விட்டு மறஞ்சிது.
அது மறஞ்ச பிறகும் ரொம்ப நேரம் அந்த வானத்தையே பாத்துட்டு இருந்தேன். அந்த ரெண்டும் திரும்ப வராதா’னு ஏங்குனேன். பறக்கும் தட்டு உண்மையா இருக்கனும், அத நானும் என் கண்ணால பாக்கணும்’னு துடிச்சேன்.
ஒரு அஞ்சு நிமிஷம் வந்து போன அந்த ரெண்டும் என்ன ரொம்ப நேரம் வெறும் வானத்த பாக்க வெச்சிடுச்சு. அந்த ரெண்டும் பாகிஸ்தானோட பலூனோ, பறக்கும் தட்டோ இல்லனா ஜொய்ங்’னு பரந்த புறாவோ, எதுவா இருந்தாலும் இந்த நாள என் காலண்டர்’ல குறிக்க வெச்சிட்டு போய்டுச்சு.
“திரும்ப வாயேன் ப்ளீஸ்”-னு மனசுலே சொல்லிக்கிட்டு மனசு கேக்காம கீழ எறங்கி போனேன்.
[பி.கு: பறக்கும் தட்டு’னா வேற்று கிரக ஜந்துக்கள் வந்து போற விமானம். மேல தெரிஞ்சிக்க இத அழுத்துங்க: https://en.wikipedia.org/wiki/Flying_saucer ]
Comments