ஒரு கணம் அழுதிட மறு கணம் சிரித்திட குழந்தையாய் மாறவே தினமும் முயற்சித்தேன்.
கதைகள் எழுதுகிறேன் காலத்தில் பயணித்து கருப்பையில் நீந்திவிட.
ஓவியங்கள் வரைகின்றேன் என் சிரிப்பை சிறைப்படுத்தி என் அழுகை சிறைப்படுத்தி அணு அணுவாய் ரசித்துவிட.
பாட்டொன்று படிக்கின்றேன் எனக்கே நான் தாலாட்டி தொட்டில் மேல் ஆடிவிட.
வேறென்ன நான் செய்ய மழலை போல் மாறிவிட?
இப்போதும் அழுகை வர சுற்றம் பார்த்து சிரிக்கின்றேன் அப்படியே நடிக்கின்றேன்.
—-xxx––
Comments