மயில் தோகையில் இறகாய் நான்! தோகை விரிக்க மழையும் நான்!
மழை மேகத்துளிகள் நான்! துளிகள் சிந்தும் கண்ணீர் நான்!
கண்ணீர் கண்களில் பிம்பம் நான்! பிம்பம் தாங்கிய திரையும் நான்!
திரையை வியக்கும் கண்கள் நான்! கண்கள் தேக்கிய ஈரம் நான்!
ஈரம் சேர்க்கும் சாரல் நான்! சாரல் படிந்த ஜன்னல் நான்!
ஜன்னல் ஓவிய மயிலும் நான்! மயிலிறகை கொண்ட புத்தகம் நான்!
புத்தகம் மூடிய ஓசை நான்! ஓசையை மிஞ்சும் ஒளியும் நான்!
ஒளியின் ஃபோட்டான் அணுக்கள் நான்! அணுக்கள் படைத்த மர்மம் நான்!
மர்மம் மறந்த மனிதம் நான்! மனிதன் நாடும் கோவில் நான்!
கோவிலற்ற கடவுள் நான்! கடவுள் வேடத்தில் அன்பே நான்!
Comments