( விமானப்படை அதிகாரிகளுக்கான விருந்தொன்றில் ஓர் இளைஞன்… )
மேகங்கள் கிழித்தெறிந்து வானத்தில் சீறியவன் இங்கு பெண்மேக கூட்டம் ஒன்றில் நகராமல் நிற்கின்றேன்.
மேகங்கள் எனை உரச அதை உணர உடல் மறுக்க விழி வழியே நகர்கின்றேன்.
தூரத்தில் நீ மேகங்கள் கலைத்தெறிந்து சூரியன் போல் ஒளி வீச
உன் ஃபோட்டான் அணுக்கள் எல்லாம் என் உடலை சூடேற்ற குளிர் தேடி உடல் அலைய உயிர் மட்டும் ஒளி தேட உனை நெருங்கி வருகின்றேன்.
கை நீட்டி அழைக்கின்றேன்: “என்னோடு வா.” “ஆடவா கூடவா?”, சிரிப்போடு முறைக்கின்றாய்.
“இன்றைக்கு ஆட வா…” கை கோர்த்து நகர்கின்றோம்.
உடலும் உடலும் அசைந்தாட காற்றில் இசை போல கலந்தாட
இதழில் ஈரமுடன் நீ கண்ணில் தாகமுடன் நான்.
“நெருங்கி வா…” என்கின்றாய். “மணந்து கொள்” என்கின்றேன். இசை நின்று அமைதி வர உன் கண்ணில் வெட்கம் வர
“இருக்கட்டும். நெருங்கி வா…”, நீயே அணைக்கின்றாய், உன் மார்பை என் மார்பில்.
இணைந்துவிட்டோம், மணக்கவில்லை. மணப்போமா, மறப்போமா? இணைந்துவிட்டோம், தெரியவில்லை.
—xxx—
பி.கு: ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் முன்னோட்டத்தால் ஈர்க்கபட்ட படைப்பு இது.
Comments