முழுமதியை கடந்து செல்லும் மேகமெல்லாம் சிவந்தன.
இளமதியை தீண்டிச்சென்ற மேகலையும் சிவந்தாள்.
ரோஜாக்களை வருடும் சேலைக்குத்தான் எத்தனை ஆனந்தம்.
ரோஜாவின் மேல் உறங்கும் சீதைக்குத்தான் எத்தனை பேரின்பம்.
வீணை மீட்டிய விரல்கள் கொஞ்சக் கொஞ்ச வீணாவும் கீதைக்கு இசைந்தாள்.
தேனை சொட்டிய நாவும் கெஞ்சக் கெஞ்ச தேனும் கோதைக்கு இனிந்தாள்.
பெண்பாலில் வெண்பாக்கள் பாடுகையில் பாவை பெண் நாவை உணர்ந்தாள்.
பெண்பாலை பெண்பாலே கோருகையில் வெண்பாவும் செண்பாவை மணந்தாள்.
– செ
Comentários