மதங்கள் ஜெயிக்கும் இடங்களில் மனிதம் தோற்றுப் போகிறது.
மனிதம் ஜெயிக்கும் இடங்களில் மதங்கள் தோற்றுப் போவதில்லை.
மதங்கள் விபத்து. தெய்வம் மரணம்.
மதங்கள் குடை. தெய்வம் மழை.
மதங்கள் கதறல். தெய்வம் நிசப்தம்.
மதமே மனமாய் மாறுவது மதங்கள் சொல்வதில்லை.
மனிதம் மதமாய் மாறுவதே மதங்கள் சொல்லுவது.
மதங்கள் அறியாமை. தெய்வம் மர்மம்.
மதங்கள் எழுத்துப்பிழை. தெய்வம் கவிதை.
மதங்கள் முட்பாதை. தெய்வம் இலக்கு.
Comments