சிட்டெறும்பு சேத்துக்குள்ள சிக்கி முக்கி தவிக்குதப்பா!
கட்டுமரம் பொளந்த படி ஆத்துக்குள்ள மெதக்குதப்பா!
காட்டருவி கண்ணசந்து சொட்டு சொட்டா கொட்டுதப்பா!
அடிச்சு போன கூரையெல்லாம் கரை கடந்து கெடக்குதப்பா!
செத்துப் போக மறுத்ததெல்லாம் மாரடிச்சு நிக்குதப்பா!
உசுர விட்ட ஒடம்பு எல்லாம் மண்ணில் பொதைய தவிக்குதப்பா!
மனுசன் கண்ணு அத்தனையும் மழை மழையா அழுகுதப்பா!
பாம்பு ரெண்டு பின்னிக்கிட்டு எழுந்து நின்னு ஆடுதப்பா!
Comments