இருளோடு பயணித்து உடல் மட்டும் தொலைத்திடவா?
மழையோடு நனைந்த படி உயிர் கூட கரைத்திடவா?
நிலவை தேடும் ராத்திரியில் நட்சத்திரங்களும் இல்லையடி.
உஷ்ணம் தேடும் வேளையிலே தீயும் பற்றவில்லையடி.
காட்டோடு காற்றாக கலந்தபடி இருக்கையிலே
நீ மட்டும் மின்மினியாய் பறந்த படி இருக்கின்றாய்.
இருட்டிலும் ஒளிரும் உன் உடலில் என் உயிர் பிடித்து அடைத்திடவா?
ஒளி வீசி உன் சிறகு படபடக்க நானும் உன்னோடு பறந்திடவா?
Comments