வேண்டுமென்ற போதெல்லாம் வந்திடாத தூக்கம் தான்
வேண்டாத கனவெல்லாம் கொடுத்துக் கொடுத்துக் கொள்ளுதடி.
தீராத அழுகையெல்லாம் தீர்த்துவிட்ட நிமிடத்தில் ஊற்றாக ஒரு பிம்பம் கண்ணுள்ளே வளருதடி.
ஒளியற்ற இரவொன்றில் நிழல் தேடி பேசுகையில் இறந்தாலும் என்னோடு இருப்பதாய் சொன்னதடி.
Comments